காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்த 2 பாலஸ்தீனிய கிறிஸ்தவர்களான சாத் சலாமா மற்றும் ஃபூமியா அய்யாத் ஆகியோரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தங்கள் ராணுவம் தேவாலயங்கள் அல்லது மத வழிபாட்டு தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை, பொதுமக்களுக்கு ஏற்பட்ட தீங்குக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.