இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரான ஆஷ்லே டெல்லிஸ் ((Ashley Tellis )) தேசிய பாதுகாப்புத் தகவல்களை சட்டவிரோதமாக பதுக்கிய குற்றச்சாட்டில் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசியக் கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே , இரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றனர்.