சீனாவில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஹெனான் மாகாணத்தில், இடைவிடாது பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், காணாமல் போன மூவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், மழை நின்றதால் சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன. முக்கிய சாலைகளை முதலில் சரிசெய்துவிட்டு பிறகு உள்ளூர் பகுதிகளில் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.