கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, தலைநகர் தோஹாவில் அரபு-இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த தோஹாவில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரேல் அரசை கண்டித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.