ராணுவ செலவினங்களை அதிகரிக்க நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். நேட்டோவிற்கு அமெரிக்கா அதிகளவில் பணம் ஒதுக்கி வந்த நிலையில், 2-ஆவது முறையாக அதிபராக பதிவியேற்ற ட்ரம்ப், மற்ற நாடுகளும் நேட்டோவின் ராணுவ செலவினத்திற்கு அதிகளவில் செலவழிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் நேட்டோவில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தார். மேலும், 2035-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடும் தங்களது ஜிடிபியில் 5 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் காரணமாக, தங்களுடைய ஜிடிபியில் 5 சதவீதம் செலவிட 32 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.இதையும் படியுங்கள் : 3 அணுசக்தி தளங்களும் சேதமடைந்தது உண்மைதான்..