பிரபல ஹாலிவுட் நடிகையும், அமெரிக்க பாப் பாடகியுமான செலினா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு நிச்சயம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செலினா கோம்ஸ் வெளியிட்டுள்ளார்.