பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்கா வாங்கி விட்டதாவும், அதற்காக அமெரிக்கா பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரபிற்கு கோடிக்கணக்கான டாலரை கொட்டி கொடுத்த தாகவும், அமெரிக்க உளவு நிறுவனமான CIA யின் முன்னாள் மூத்த அதிகாரி ஜான் கிரியோகா தெரிவித்துள்ளார். CIA ல் 15 ஆண்டுகள் பணியாற்றிய இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் ஒரு மாபெரும் ஊழல் நாடு எனவும் அங்கு முக்கிய பதவிகளில் இருந்த பிரதமர் மற்றும் சர்வாதிகாரிகள் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். பர்வேஷ் முஷாரப் போன்ற ராணுவ சர்வாதிகாரிகளுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு இருந்த தாகவும், பாகிஸ்தானை சர்வாதிகாரிகள் ஆட்சி செய்வதே அமெரிக்காவின் விருப்பம் எனவும் பல அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.