அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தக போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனா தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனப் பொருட்களுக்கான வரியை 145 சதவீதத்திலிருந்து 245 சதவீதமாக அதிகரித்த நிலையில், சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், உலகின் மிகப்பெரிய பொருளாதார வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து சீனா எந்த கருத்தையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.