ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போரில் கொல்லப்பட்ட 6 ஆயிரம் வீரர்களின் உடல்களை பரிமாறிக் கொள்ள இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.ஆப்ரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு மறுநாள் ரஷ்யா மற்றும் உக்ரைனின் பிரதிநிதிகள் துருக்கியில் உள்ள சிராகன் அரண்மனையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் வீரர்களின் உடல்களை பரிமாறி கொள்ள ஒப்புக்கொண்டன.