ஈரானில் அகதிகளாக வசித்துவரும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் மட்டும் ஈரானில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.