10% வரி விதிப்பு : நீதிமன்ற உத்தரவையும் மீறி வெளிநாட்டு இறக்குமதிகள் மீது மேலும் 10% வரியை விதித்த அதிபர் டிரம்ப், தாம் செய்ய விரும்புவதை செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக கூறினார். அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்து அதிரடி காட்டினார். குறிப்பாக இந்தியப் பொருள்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி, ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதித்தார். அமெரிக்கா-இந்தியா இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையின் விளைவாக,அது 18 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில் உலக நாடுகளின் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கூறிய டிரம்ப், தற்போது வசூலிப்பதை விட அதிகமாக வசூலிக்க முடியும் என ஆணவத்துடன் கூறியுள்ளார். Related Link "டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது"