ரஷ்ய ராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் தடைவித்து வருகிறது. அந்த வகையில் 45 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், இதில் இந்தியாவை சேர்ந்த, 'ஏரோட்ரஸ்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், அசென்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ என்டர்பிரைசஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர, இப்பட்டியலில் சீனாவை சேர்ந்த, 12 நிறுவனங்கள், தாய்லாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.இதையும் படியுங்கள் : அமெரிக்கா சக்தி வாய்ந்த நாடாக இருக்க என்ன காரணம்?