பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.