ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20ஐ கடந்தது. பல வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டு இடமான நீல மசூதியின் தூண்களும் சேதமடைந்தன. இதனால் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன.