பிரபல அறிவியலாளரின் புகைப்படம் : எப்ஸ்டீன் கோப்புகளில், உலகப்புகழ் பெற்ற பிரபல இயற்பியல் நிபுணரான ஸ்டீஃபன் ஹாக்கிங், அரைகுறை ஆடை இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இளம் சிறுமிகளையும் சீரழித்து, பல பிரபலங்களுக்கு விருந்தாக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்தவர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும் நிலையில், பிரபல இயற்பியல் நிபுணரான ஸ்டீஃபன் ஹாக்கிங் எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. அதில் எப்ஸ்டீனுக்கு சொந்தமான தீவில் அரைகுறை ஆடையணிந்த இரண்டு இளம்பெண்களுக்கு நடுவே ஸ்டீஃபன் ஹாக்கிங் காணப்படும் புகைப்படம் முதலான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Related Link அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சைக்ளோன் பனிப்புயல்