அமெரிக்காவின் மிசிசிப்பியில் உள்ள ஒரு பள்ளியின் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 12 பேர் பலத்த காயமடைந்த நிலையில், 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிக்கரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் 4 பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் யார் இதுவரை யார் என்பது தெரியாத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.