சீனாவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர் சறுக்கி விழுந்து உயிரிழந்த திகில் வீடியோ வெளியாகி உள்ளது. சீனாவின் சிச்சுவானில் 18 ஆயிரத்து 332 அடி உயரமுள்ள நாமா மலையில் ஒரு குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். பனி மலையில் பாதுகாப்பு கயிறை கட்டிக்கொண்டு ஒவ்வொருவராக நடந்து சென்றனர். அப்போது ஒருவர் புகைப்படம் எடுப்பதற்காக தனது பாதுகாப்பு கயிற்றை அவிழ்த்து விட்டு நின்றபோது தடுமாறி பனியில் வழுக்கி சென்று உயிரிழந்தார்.