இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்ததோடு 6 பேர் மாயமாகியுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.மேலும் ஆங்காங்கே சாலைகள் மற்றும் தரைப்பாலங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடைந்து காணப்படுகிறது.