சீன தம்பதி நச்சு பூஞ்சையை எடுத்து வந்த செயல், அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு சமமானது என்று அமெரிக்காவின் சீன விவகார நிபுணர் எச்சரித்துள்ளார். சீனா உடனான உறவுகளை முறித்துக் கொள்வது உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் Covid-ஐ விட அதிக பாதிப்புகள் ஏற்பட சாத்தியமுள்ளது என்று அமெரிக்க நிபுணர் கார்டன் ஜி சாங் அச்சம் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த 33 வயதான யுன்கிங் ஜியானும், அவரது காதலன் 34 வயதான ஜுன்யோங் லியுவும், கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசியை தாக்கக் கூடிய தலை கருகல் நோயை ஏற்படுத்தும் ஃபுசாரியம் கிராமினேரம் என்ற பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்த சதி செய்ததாக கூறப்படுகிறது.