சவுதி அரேபியாவில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான al-Natah என்ற கோட்டை நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் நாடோடிகளாக இருந்த காலத்தில் இருந்து மருவி நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு படிப்படியாக மாறியதன் சாட்சியாக உள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுற்றிலும் வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட அப்பகுதியில் சுமார் 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு அரணாக நீண்ட சுவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குய்லூம் சார்லஸ் மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.