அர்ஜென்டினா உச்சநீதிமன்றத்தின் அடித்தளத்தில் இருந்து நாஜிக்களின் ஆவணங்கள் அடங்கிய, ஹிட்லர் காலத்தை சேர்ந்த 83 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற அருங்காட்சியகத்துக்காக அடித்தளத்தில் இருந்த பழைய பொருட்களை தேடிய போது நீதிமன்ற பணியாளர்கள் இந்த பெட்டிகளை கண்டெடுத்துள்ளனர். இவை 1941ஆம் ஆண்டு ஜூன் மாதம் டோக்யோவில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் இருந்து, ஜப்பானிய நீராவி கப்பலான Nan-a-Maru மூலம், அர்ஜெண்டினா தலைநகர் Buenos Aires-ஐ வந்தடைந்தது தெரிய வந்துள்ளது.