இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பினர், பாலஸ்தீனியர்கள் எட்டு பேரை பொதுவெளியில் நிறுத்தி சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.