ஏமன் நாட்டின் செங்கடலில் படகு கவிழ்ந்ததில் 76 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமனின் அப்யான் மாகாணம் அருகே 157 அகதிகளை ஏற்றிச் சென்றபோது பாரம் தாங்காமல் படகு கடலில் கவிழ்ந்ததில், அனைவரும் தண்ணீரில் விழுந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்த்தவர்கள் எனத் தெரிகிறது. இந்த சூழலில், கான்பார் மாவட்ட கடற்கரையில் 54 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில், மேலும் சில உடல்கள் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த விபத்தில் இதுவரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.