நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி மலையேறும் வீரர்கள் 7 பேர் பலியான நிலையில், மேலும் 4 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. டோலாகா (( dolakha )) மாவட்டத்தில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரமுள்ள யாலுங் ரி ((Yalung Ri )) சிகரத்தின் அடிப்படை முகாம் பனிச்சரிவில் மூழ்கியது. இதில் மூன்று அமெரிக்கர்கள், கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.