துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள கிரேக்கத்தின் டோடெக்கானீஸ் (( Dodecanese )) தீவுகளில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரோட்ஸிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் 68 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக தெரிவித்துள்ள அந்த மையம் தெற்கு கிரீஸ், மேற்கு துருக்கி, ஏஜியன் கடற்கரையிலும் அதன் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதில் சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.