உலகின் மிகப்பெரிய வெப்பப்பாலைவனம் என அறியப்படும் சஹாரா பாலைவனத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் தேங்கியுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பொழிந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சராசரியாக ஓராண்டில் பொழியும் மழையைக் காட்டிலும் ஒருசில பகுதிகளில் அந்த இரண்டு நாள்களில் பெய்த மழையின் அளவு அதிகமாக இருந்ததாக மொரோக்கோ அரசாங்கம் கூறியுள்ளது.