பாகிஸ்தானின் குவெட்டா ((Quetta))எஃப்சி தலைமையகத்திற்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.19 பேர் காயமடைந்தனர். மாடல் டவுன் ((Model Town )) பகுதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களின் ஜன்னல்களை உடைந்து சிதறின. சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுக்கள் உடனடியாக விரைந்த நிலையில், இதுவரையில் இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.