ஈக்வடாரின் தென்மேற்கே பகுதியில் உள்ள ஒரு கடற்கரையில் 5 மனிதத் தலைகள் தொங்க விடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வன்முறையால் நாடு தத்தளித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈக்வடார் ஊடகங்களால் வெளியிடப்பட்ட படங்களில் கடற்கரையில் உள்ள மரங்களில் கயிறுகள் கட்டப்பட்டு அதில் மனிதத் தலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது. அதன் அருகில் பியூர்டோ லோபஸ் துறைமுக மீனவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் நபர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது.