பசிபிக் பெருங்கடலில் 55 நாட்கள் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஈக்வடார் கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பெருவின் தலைநகர் லிமாவின் தெற்கே உள்ள புகுசானா விரிகுடாவிலிருந்து புறப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் படகின் மின்மாற்றி செயலிழந்ததால் மூன்று பெருவியர்களும் இரண்டு கொலம்பியர்களும் நடுக்கடலில் சிக்கி தவித்தனர். அவர்களை கடந்த சனிக்கிழமை ஈக்வடார் கடற்படை மீட்டு கலபகோஸ் தீவுகளில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு பத்திரமாக அழைத்து வந்தது. அப்போது மழைநீர், பச்சை மீன்கள் ஆகியவற்றை வைத்து உயிர் பிழைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.