டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம் மூலம் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பணியமர்த்தப்பட்ட 48 இந்தியர்கள், கடுமையான நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சம்பளமே கொடுக்காமல் பணியாற்ற கட்டாயப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள், தங்களை காப்பாற்றுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.