வங்கதேசத்தில் நடைபெற்ற பேரணியின் போது வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்த நிலையில், நாற்காலி உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. வங்காளதேசத்தின் இளைஞர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சியின் பேரணியில் இந்த வன்முறை வெடித்த நிலையில், ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டது. மேலும், கோபால்கஞ்ச் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.