மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், நிலச்சரிவில் ஏராளமான வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் சேதமடைந்ததாகவும், மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில், வீதிகள் ஆறுகளாக மாறி வாகனங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் மூழ்கடித்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டக்ஸ்பானில் ஒரு உணவகம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இதையும் படியுங்கள் : பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க இஸ்ரேல் மறுப்பு