காங்கோ நாட்டில் செப்பு சுரங்கத்தில் உள்ள பாலம் சரிந்து விழுந்ததில் 32 பேர் பலியாயினர். லுவாலாபா மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதை அடுத்து, தொழிலாளர்கள் பீதியடைந்து பாலத்தின் வழியாக தப்பிக்க முயன்றபோது சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்து நடந்தேறியதற்கு முன்பாக தான் ராணுவ வீரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.