ஜெர்மனியில் 2-ம் உலக போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கலோன் நகரில் சாலை கட்டமைப்பு பணியின்போது இந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் நகரில் இருந்து வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.