சிரியா தலைநகர் டமாஸ்கஸ் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். டமாஸ்கஸின் புறநகரான டுவைலாவில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்திற்குள் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.இதையும் படிக்கவும் : கீவ் மீது ரஷ்யா பெரிய அளவில் தாக்குதல் டிரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்..!