தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறநகரில் பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் உடல் கருகி இறந்தனர். தீக்காயம் அடைந்த 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வாட் காவோ பிரயா என்ற பள்ளிக்கு சொந்தமான பேருந்தே தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.