ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வெதேவின் மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் 2 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ”டெட் ஹேண்ட்” தொடர்பாக கருத்து கூறிய டிமித்ரி மெத்வேதேவ், அணு ஆயுதத் தாக்குதல் திறன்களை ரஷ்யா கொண்டிருந்தது என்பதை ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.