வியட்நாமை தாக்கிய கடுமையான புயலில் சிக்கி 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டில் ஆசியாவின் சக்திவாய்ந்த புயல் என கூறப்படும் Yagi புயல் வடக்கு வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸை தாக்கியது. இந்நிலையில் வியாட்நாமில் கடுமையான காற்று வீசப்பட்டதில் மரங்கள் ஆங்காங்கே வீடுகள் மற்றும் சாலைகள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் Hoa Binh மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 4 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. புயல் காரணமாக தலைநகர் Hanoi -ல் மின்சாரம், தகவல் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டது.