போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திப்பதற்கு முன்னதாக, உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கார்கிவ் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், மேற்பரப்பு பெரும் சேதமடைந்து தீ பற்றி எரிந்தது. இதில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் பல இடங்களில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.