இந்தியா - அமெரிக்கா இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை நீட்டிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹெக்செத் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.