இறக்கத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குசந்தைகள் மீண்டும் எழுச்சி பெற்று நல்ல ஏற்றத்துடன் வார வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் ஆயிரத்து 961 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 117 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 557 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 907 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.