அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அன்னிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84 புள்ளி 09 ஆக சரிந்தது. இதற்கு முன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவாக 84 புள்ளி 09 ஆக வர்த்தகமானது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை தடுக்கும் நோக்குடன் கடந்த இரண்டு வாரங்களாக ரிசர்வ் வங்கி அதிக அளவில் அமெரிக்க டாலர்களை விற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் டாலரின் மதிப்பு மேலும் அதிகரித்து ஆசிய செலாவணிகள் கடும் சவாலை சந்திக்க வாய்ப்புள்ளது.