கவுதம் அதானிக்கு எதிரான அமெரிக்க நீதிமன்றத்தின் கிரிமினல் நடவடிக்கையின் எதிரொலியாக, இந்திய பங்கு சந்தைகளில் இரண்டாவது நாளாக அதானி குழும பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன, அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் 8 புள்ளி 6 சதவிகிதமும், அதானி எனர்ஜி நிறுவன பங்குகள் 5 புள்ளி 6 சதவிகிதமும் விலை குறைந்தன. இரண்டு நாட்களில் அதானி குழும பங்குகள் 27 சதவிகித விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி என்டர்பிரைசஸ், அதானி வில்மார், அதானி துறைமுகங்கள், அதானி பவர் ஆகிய நிறுவன பங்குகளும் சரிந்தன. எனினும் இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், அதானிக்கு சொந்தமான ஏசிசி மற்றும் அம்புஜா சிமென்ட் நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஒரளவு ஆர்வம் காட்டினர்.