எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில், அதன் வலையமைப்பில் உள்ள செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிப்பதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 7,500 இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைக்கு, அமெரிக்காவின் ஃபெடரல் தகவல் தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.