சாம்சங் நிறுவனம் உலகளாவிய அளவில் 10 சதவிகிதம் அளவுக்கு ஆட்குறைப்பை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங்கில் மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தென் கொரியாவில் யாருடைய வேலையும் பறிக்கப்படமாட்டாது என கூறப்படுகிறது.