தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, OPPO நிறுவனம் F31 5G என்கிற செல்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது கடினமான பாடி மற்றும் செயல்திறன் கொண்டது எனவும், நடுத்தரமான ஸ்மார்ட்போனை விரும்பும் பயனர்களுக்கு பலவித சாதனங்களை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் Oppo F31 Pro+, F31 Pro மற்றும் F31 ஆகியவை அடங்கும். இந்த புதிய மாடல் இந்திய பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.