நத்திங் நிறுவனத்தின் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது போன் 2a பிளஸ் மாடலை போன்ற டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது. வெறும் 1000 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த போனின் விலை 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.