யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பர் உடன் சேர்த்து பயோமெட்ரிக் அங்கீகார வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு பதில் கைரேகை அல்லது முக அங்கீகாரம் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும்.