சுமார் 89 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 16 மாடல் போனை ரெடிட் சேவையை பயன்படுத்தி 26 ஆயிரத்து 970 ரூபாய்க்கு வாங்கியதாக பயனாளர் ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்த நிலையில், ரெடிட் சேவை மூலம் குறைந்த விலையில் பெற்றுள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.