மீன்வளம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்திற்கான கட்டணம் பட்டியலினத்தவர்களுக்கு 150 ரூபாயும், மற்றவர்களுக்கு 300 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.